நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல வெளிநாட்டுக்குப் போகப் போவதும் இல்லை. ஆதீன மடத்தில்தான் நான� �� இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக உள்ள குருசாமி தேசிகர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,
தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல� �வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி நடந்து கொண்டுள்ளார்.
தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எ டுத்த முடிவு அல்ல. அந்த முடிவை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.
இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின ்பற்றப்படவில்லை.
இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத ்துள்ளார்.
அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக த� �ரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹரிபரந்தாமன் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,
மதுரை ஆதீனமான நான் நித்தியானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலோ, சட்டவிரோத காவலிலோ இல்லை. என் தொடர்பாக இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இ� ��்லை. விளம்பரம் பெறும் நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான் தினந்தோறும் ஆதீன மடத்தில் பக்தர்களுடனும், சீடர்களுடனும் கலந்துரையாடி வருகிறேன். நேற்று கூட பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினேன். ஆனால் மனுதாரர் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதில் இருந்தே அவரது உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.
அடுத்த ஆதீனம் யார் என்பதை அறிவிக்க எனக்கு அதிகாரமும், தகுதியும் உண்டு. ஆதீனம் இதுபோலத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு மனுதாரருக்கு அதிகாரம் இல்லை.
அதேபோல என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறுவதும் உண்மையல்ல. அதுபோன்ற எந்த முடிவும் இல்லை. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Post a Comment