News Update :
Home » » இந்திய சினிமாவிற்கு இன்று 100-வது பிறந்தநாள்

இந்திய சினிமாவிற்கு இன்று 100-வது பிறந்தநாள்

Penulis : karthik on Thursday, 3 May 2012 | 08:00




இந்தியர்களையும் சினிமா வையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியர்களின் பொழுது போக்கில் முக்கிய பங்காற்றுவது சினிமாவே. சினிமா உபகரணங்கள் போன்றவை எல்லாம் ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பாக இருந்தாலும், உலகளவில் ஆண்டுக்கு அதிக சினிமா படங்களை வெளியிடுவதில் இந்தியர்களே முன்னணியில் உள்ளனர். 
சினிமா டிக்கெட்டுகளின் விற்பனை, மற்றும் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், இந்திய சினிமாத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும்.  ஆசியா-பசிபிக் பகுதியில் சினிமா பார்ப்பவர்களில் 73 சதவீதம் அளவு இந்தியர்களே ஆவர்.
 
சினிமாவிற்கான இந்திய சென்சார் போர்டு கொடுத்துள்ள அறிக்கையின் படி ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் சினிமாவிற்க்குச் செல்கின்றனர்.
 
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்திய சினிமாத்த� ��றை உலகிலேயே அதிகளவில் சினிமா படங்களை வெளியிடும் சினிமாத் துறைகளில் முதல் இடத்தில் உள்ளது.
 
இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சினிமா அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.
 
1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
 
இவற்றிற்குப் பிறகு முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா இதே மாதம், இதே தேதி, கடந்த 1913-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இந்திய சினிமாத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே ஆவார்.
 
வங்கமொழியில் உருவான இப்படம் ஊமைப்படமாக வெளியானது. இப்படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் காட்சி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.30 வரை திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதே இப்படத்தை தினசரி 4 காட்சிகள் ஓ� ��்டியிருக்கிறார்கள்.
 
இன்றைய முழுநீளப்படங்களின் முன்னோடிப் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியாகி இன்றோடு 100 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger