பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத� ��தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அந்த பயணத்துக்கிடையே அவுரங்கா பாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்திய அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நம்ப முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்தவர். அவரை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும். பாராளுமன்ற மேல்- சபை எம்.பி. பதவி அவருக்கு தேவை இல்லை.
தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்து இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியான போது நான் எந்த அளவுக்கு கு� ��ப்பம் அடைந்தேனோ, அதே மாதிரி ஏராளமானவர்கள் குழம்பி போனார்கள். பதவி கொடுப்பதை விட விருது கொடுப்பதுதான் தெண்டுல்கருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
Post a Comment