News Update :
Home » » மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்?

மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்?

Penulis : karthik on Thursday, 3 May 2012 | 04:15




மதுரை ஆதீன மடத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கடத்தப்பட்டாரா அல்லது எங்காவது போய் விட்டாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதுவரை எந்தவிதமான மெகா சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த மதுரை ஆதீனம் இன்று அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது. நடக்கக் கூடாது நடந்து விட்டதாக பக்தர்கள் கருதுகின்றனர். பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ள மதுரை ஆதீனத்தில் தற்போது புதிததாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த ஆதீனத்தில் தங்கியிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காண வில்லை என்று புதுப் பரபரப்பு கிளம்பியுள்ளது. இவரை யாரேனும் சிறை வைத்துள்ளனரா என்ற கேள்வியும் பரபரப்பாக பரவி வருகிறது.

ஆதீன மடத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கீர்த்திகா, செல்வி என இரண்டு பேர் சில மாதங்களுக்கு முன்பு சமையலுக்காக வந்தனர். இவர்களை ஆளுக்கு ஒரு ஊரில் மதுரை ஆதீனம் தங்க வைத்துக் கவனித்து வந்தாராம்.

இதேபோல ஆதீனத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் வைஷ்ணவி. இவர் தஞ்சை மாவட்டம் கச்சனத்தைச் சேர்ந்த இளம் பெண். இவருடன் இவருடைய தங்கை கஸ்தூரியும் இங்கு வந்து சேர்ந்தார். வைஷ்ணவியின் வருகைக்குப் பின்னர் அவரது கைதான் மடத்தில் ஓங்கியிருந்ததாம்.

இவர்களுக்காக பெருமளவில் மதுரை ஆதீனம் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தவரான வைஷ்ணவியை இப்போது மடத்தி்ல காணவில்லையாம். சமீபத்தில்தான் இவர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதீனத்தின் உதவியாளராக செயல்பட்டு வந்தார் வைஷ்ணவி. இவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். போலீஸிலும் இதுதொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் போகவில்லையாம். ரகசியமாக அவரை மடத்தினரே தேடி வருவதாக கூறப்படுகிறது.

அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சிலரால் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவரே உயிருக்கோ அல்லது வேறு எதற்கோ பயந்து தலைமறைவாகியிருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

வைஷ்ணவி தங்களது வீட்டுக்கு வரவில்லை என்றும் அவர் மடத்தில்தான் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் மடத்தில் அவர் இல்லை என்று கூறுகிறார்கள். வைஷ்ணவியிடம் சில ரகசியங்கள் இருக்கலாம் என்றும் அதை தெரிந்து கொண்டவர்களால் ஆபத்து ஏற்படும் என்று பயந்து அவர் தலைமறைவாகியிருக்கலாம் அல்லது அந்த ரகசியத்தை வைஷ்ண� �ி வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் அவரை சிறை வைத்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மடத்தில் இப்படியா அடுக்கடுக்கான சோதனைகள்...



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger