புதுக்கோட்டை தொகுதியில ் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்ததால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் மற்ற கட்சிகளின் ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தலை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர். இதற்கு ஏற்றார்போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தது.
ஆனால் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து விட்டது. எனினும் இந்த தேர்தலில் தி.மு.க. உறுதியாக போட்டியிடும் என்று நம்பகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை புறக்ககணிக்க போவதாக தி.மு.க. தலைவர் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் அ.தி.மு.க.வினர் வரலாறு காணாத வெற்றி பெறல� �ம் என்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்து உள்ளது. கடந்த தேர்தலின் போது பாரதீய ஜனதா வேட்பாளர் பழ.செல்வம் வெறும் 1748 வாக்குகள் மட்டும் பெற்றிருந்த� ��ர். எனவே அந்த கட்சியால் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்த முடியாது.
திருச்சி வந்த மத்திய மந்திரி ஜி.கே. வாசன் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது தி.மு.க. இந்த தேர்தலின் இருந்து விலகி கொண்டது. ஏற்கனவே இந்த தொகுதியில் 1967, 71, 77, 80, 84, 91 என 6 தேர்தல்க� �ில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்சி தலைமை அறிவிக்கும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று மாவட்ட நிர்வாகி ஒருவ ர் தெரிவித்தார்.
Post a Comment