தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிலம் மற்றும் காவல் அதிகாரங்களை வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, அதற்கு நாங்கள் தயாரும் இல்லை என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் முகத்தில் அடித்தாற் போல கூறியுள்ளது இலங்கை அரசு.
இதுதொடர்பாக இந்திய எம்.பிக்களிடம் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறுகையில்,
இந்திய மாநிலங்களில் அமலில் உள்ள போலீஸ் அதிகாரங்களை போன்று இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க முடியாது. இவ்வாறு போலீஸ் அதிகாரங்களை வழங்குவதால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். பயங்கரவாத ஒழிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு வெளியிட்டுள்ளதே இதற்கு சிறந்த உதாரணமாகும் என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாம்.
இலங்கைத் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட தயாராக இல்லை சிங்கள ஆட்சி என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இதைக் கூட தர முடியாத, தரத் தயாராக இல்லாத இலங்கை அரச ு, தமிழர்களை எப்படி சமத்துவத்துடன் வாழ விடும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
Post a Comment