மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் குடும்பத்திற்கு சொந்தமான 'தயா' சைபர் பார்க் உள்ளது. இந்த கட்டிடம் அமைந்துள்ள சில பகுதிகள் புறம்போக்கு நிலத்தில் உள்ளதாகவும், முன்பகுதியில் சுமார் 8 செ� �்டு இடம் மதுரை மாநககராட்சிக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தை ஆக்கிரமித்து 'தயா' சைபர் பார்க் க� ��்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிக� �ும் சர்வே செய்ததில் கட்டிடத்தில் முன்பகுதியில் சுமார் 8 சென்ட் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும், சில பகுதிகள் புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்தது.
மேலும் 'தயா' சைபர் பார்க் கட்டிடத்திற்கு மாநக ராட்சியிடம் வரைபட அனுமதி பெறாதத ும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாநகராட்சி ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக மு.க.அழகிரி குடும்பத்தினருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் 'தயா' சைபர் பார்க் ஆக்கிரமிப்பு இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதில் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என கமிஷனர் அறிவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
Post a Comment