கேரள மாநிலம் கொல்லம் கட� ��்பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது, அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இத்தாலி கப்பல் வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர ்.
இந்நிலையில் இத்தாலி கப்பல் வீரர்கள் இருவரையும் விடுவிப்பதற்காக இத்தாலி அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியது. கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இ
தற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு இந்திய கடல் பகுதியில் நடைபெறவில்லை. எனவே இவ்வழக்கை கேரள அரசு விசாரிக்க முடியாது' எனக் கூறியுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அரசு இத்தாலியர்களுக்கு ஆதரவான பதிலைக் கூறி, இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் துரதிருஷ்டவசமானது என உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
முதலில் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது. எனவே கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்வதற்காக, இத்தாலி அரசு தனது ராஜ தந்திரங்கள் மூலம் இந்திய அரசைக் கவர்ந்ததுடன், உச்ச நீதிமன்றத்தை நாடியது. இத்தாலி அரசின் ரா ஜ தந்திரங்களுக்கு இந்திய அரசு பணிந்துள்ளது.
Post a Comment