News Update :
Home » » நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

Penulis : karthik on Friday 20 April 2012 | 06:29




2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டிய� ��ில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்த� �, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து முதலிடம்

2011 ம் ஆண்டு மட்டுமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.

20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அனைத்து வருடங்களுக்குமான உலகளாவிய 'செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் லீவ்

கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி, ஆகஸ்ட் ( ரம்ஜான் மாதம் ) மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

8 இந்திய நகரங்கள்

செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பாகிஸ்தானின் லாகூரும் வியட்ந� �மின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger