தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று நிருப� �்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத்துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயே ராஜபக்சே, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக்கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட தி.மு.க.வும் அதே கருத்தைத்தான் கொண்டது.நாங்கள் பயங்கரவாதத்துக்கு தயாராக இல்லை.
கேள்வி:- தனித் தமிழ் ஈழம் கேட்பது என்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறார ே?
பதில்:- தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.
கேள்வி:- தமிழ்நாட்டில� �தான் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியாவில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேளுங்கள் என்று கோத்தபயே சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கையில் இருக்கிற அரசைப்போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். ஆகவ ே, எங்களுக்கு இந்திய அரசை விட்டுப்பிரிந்துபோக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
அறிவார்ந்த சிறந்த தொழிற்சங்கவாதியும், திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினருமான மா.வெ.நா.என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மா.வெ.நாராயணசாமி மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
'மிசா' கொடுமைக்கு ஆளாகி காராக்கிரகத்தில் அடைபட்டு சித்ரவதைகளுக்கு ஆளான போதிலும், கொண்ட கொள்கையி� ��் உறுதியோடு இருந்து அரும்பணியாற்றியவர் அவர். திருவொற்றியூர் பகுதியிலே உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்க தலைவராக பல ஆண்டு காலம் இருந்து, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பெரிதும் பாடுபட்ட, மா.வெ.நாராயணசாமியின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.
Post a Comment