சர்வதேச சந்தையில் கச்ச� � எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் பெட்ரோலியம் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு தயங்கி வருகிறது. பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் அது மக்களை கடுமையாக பாதிப்பதோடு பணவீக்கத்தையும் அதிகரிக்க செய்துவிடும� �� என அஞ்சப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்துள்ளது. இனியும் இழப்பை தாங்க இயலாது என்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 8 உயர்த்தப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் மத்திய-மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறின. இதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்கலாமா? எ� �்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோவா மாநில அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைந்தது.
இதேபோன்று வரி குறைப்பில் ஈடுபடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 15 சுங்க வரி வசூல� ��க்கிறது. மாநில அரசுகள் ரூ. 4 முதல் ரூ. 9 வரை விற்பனை வரி வசூலிக்கின்றன.
டீசலை பொறுத்தவரை மத்திய அரசு ரூ. 5 சுங்க வரி வசூலிக்கிறது. மொத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய- மாநில அரசுகள் ரூ. 27 வரை வரிகளாக வசூல் செய்கின்றன.
முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பை ச� ��ய்யும்படி மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. அதே சமயத்தில் மத்திய அரசும் பெட்ரோலியம் பொருட்களின் மீது சுங்க வரி விதிப்பை குறைக்கும்.
இந்த நடவடிக்கைக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரி குறைப்பு செய்ய மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளால் பெட்ரோல்-டீசல் விலைகள் கணிசமாக குறையும். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பும் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒருவேளை விலையை உயர்த்த நேரிட்டாலும் அது மக்களையோ எண்ணெய் நிறுவனங்களையோ பாதிக்காது. மாறாக மத்திய-மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் மட்டுமே இழப்பு ஏற்படும்.
Post a Comment