News Update :
Home » » தபால் நிலையங்களில் சோலார் விளக்குகள் விற்பனை: தமிழகம் முழுவதும் விரைவில் கிடைக்கும்

தபால் நிலையங்களில் சோலார் விளக்குகள் விற்பனை: தமிழகம் முழுவதும் விரைவில் கிடைக்கும்

Penulis : karthik on Friday, 13 April 2012 | 23:54




தபால் பரிமாற்ற சேவை, � ��ணப் பரிமாற்றம் மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால்துறை பொதுமக்களின் நலனைக் கருதியும், வருவாயை பெருக்கவும் மேலும் சில அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது. தபால் நிலையங்களில் ஏற்கனவே தங்க நாணயம் விற்பனை, ரெயில் டிக்கெட் முன்பதிவு, மின்கட்டணம் செலுத்தும் வசதி, கைக்கடிகார விற்பனை, மினி குளிர் சாதனப்பெட்டி விற்பனை ஆகியவை நடந்து வருகிறது.

தபால்துறை தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� �� முழுவதும் இந்த விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் டி.லைட் எஸ் 250 என்ற மாடல் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எப். பல்புகளை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண் டது. 50 ஆயிரம் மணி நேரம் எரியும். 12 மாதம் உத்தரவாதம் உள்ளது. இதில் செல்போனையும் 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். டி.லைட் எஸ் 10 மாடல� � விளக்கு ரூ.549 ஆகும். இது உறுதியான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எளிதில் உடையாது. டி.லைட் எஸ் 1 மாடல் விளக்கின் விலை ரூ.399 ஆகும். இதற்கு 6 மாதம் உத்தரவாதம் உள்ளது. இந்த சோலார் விளக்கு கள் தற்போது வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர் கருங்குழி, உத்திரமேரூர், பெரிய காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணை� ��்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணை தபால் நிலையங்கள் என 19 தபால் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்க ளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியை தபால் துறை எடுத்து வருகிறது. இந்த தகவலை சென்னை தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger