தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள துறைமுக நகரமான கார்டா ஜெனாவில் சர்வதேச மாநாடு நடக்கிறது. அதில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதற்காக, அதிபர் ஒபாமா கொலம்பியாவில் உள்ள கார்டா ஜெனாவுக்கு சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு படையினரும், மெய்க்காப்பாளர்களும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அவரது 12 மெய்க்காப்பாளர்கள் கார்டாஜெனாவில் விபசார அழகிகளுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்ததாக செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.மேலும� �� அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பும்படி உத்தரவிடப் பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் நாடு திரும்பினார்கள்.
இந்த தகவலை அமெரிக்க உளவுத் துறை செய்தி தொடர்பாளர் எட்டொனாவன் உறுதிப் படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. மேலும் அவர் கூறும் போது, இந்த புகாரினால் எந்த பாதிப்பும் இல்ல� �.
திட்டமிட்டபடி அதிபர் ஒபாமா நேற்று இரவு கொலம்பியா சென்று விட்டார். அங்கு நடந்த விருந்தில் சர்வதேச தலைவர்களுடன் கலந்து கொண்டார். மெய்க்காப்பாளர்கள் அமெரிக்கா திரும்பியதால் அவரது பாதுகாப்பில் எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை என்றார்.
Post a Comment