ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் இன்று செயல்படத்தொடங்கியது . இத்துடன், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவற்றில், 1,32,013 மெகா வாட், அனல் மின்சாரம் ஆகும். 38,991 மெகா வாட், நீர் மின்சாரம் ஆகும். 4,780 மெகா வாட், அணு மின்சாரம் ஆகும். இதனால் தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக நிலவி வரும் மின்பற்றாக்குறை இன்று வரை தீர்ந்தபாடில்லை. தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து தற்போது 100 மெகா வாட் மின்சாரம் பகலிலும், 750 மெகா வாட் மின்சாரம் இரவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து பகலில் 200 மெகா வாட் மின்சாரம் வழங்க மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சதீஷ்குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் நாராய� �சாமி முன்னதாக கூறியிருந்தார்.
கூடங்குளம் உள்ள அணு உலைகள் முழுமையாக உற்பத்தி தொடங்கும் போது, தமிழகத்திற்கு 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மின்சாரத்தின் மூலமும் மின்சாரம் பெற வழிவ கை செய்யப்பட்டு வருகிறது.
Post a Comment