2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுக்களை பூர்த்தி செய்வதில் பெரும் பிழைகளை செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இது போன்ற தந்திரங்களை கையாள்வதற்கு நீதிபதி இன்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை 410 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 200 மனுக்களில் பெரும் தவறுகள் இருந்ததாக இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.
மேலும் நீதிபதி கூறும்போது சினியுக் பிலிம் பிரைவேட் லிமிடெட் டைரக்டர் கரீம் மொரானி தற்போது ஜாமீனில் உள்ளதாகவும், மேலும் அவர் சமர்பித்துள்ள மனுவில் ஐ.பி.எல். விளையாட்ட� �� போட்டியை காணும் வகையில் தனக்கு ஏப்ரல் 16 முதல் 19 வரை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்ததாகவும், இது போன்ற தந்திரங்கள் கையாள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
இருந்தபோதிலும், மொரானிக்கு ஏப்ரல் 16 முதல் 19 வரை கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment