கார்கில் போருக்கு பின் இந்தியா- பாகிஸ்தான் இடையே பொருளாதாரத்தில் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்தது. இந்� ��ிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்திய பொருளாதாரச் சந்தை தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் மத்தூம் அமின் பாஹிம் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இதற்கு தேவையான அலுவலக பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ஆசிய கண்டத்தில� �� உள்ள நாடுகளின பொருளாதாரா வளர்ச்சிக் குறியீட்டில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment