முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட 'டேம் 999' படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. கேரளாவை சேர்ந்த சோகன் ராய் இயக்கினார். இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளம் ஊருக்கு வருவது போன்றும் நிறைய பேர் நீரில் மூழ்கி பலியாவது போன்றும் காட்ச� �கள் இருந்ததால் எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து தமிழகத்தில் 'டேம் 999' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆஸ்க� �ர் விருதுக்கு 'டேம் 999' படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை.
தற்போது குளோபல் மியூசிக் கவுரவ விருது (ஜி.எம்.ஏ.) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி இசை மற்றும் ஒலி அமைப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.
Post a Comment