இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக� �டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது.
இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.
ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்டுகளில் அதிர்வு ஏற்பட்டது. இருந்த போதும் சுனாமி பேரலைகள் தோன்றவி� ��்லை. இதற்கு புவிதட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே காரணம் என இங்கிலாந்து புவியியல் நிபுணர் ரொகர் மியூசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரும்பாலான நில நடுக்கங்களால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் சுனாமி ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புவி 12 தட்டுகளால் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக 13-வது புவிதட்டு ஒன்று உருவாகி வருவதாக இலங்கையின் சிங்கள புவியியல் துறை பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இது இலங்கை அருகே உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியாவின் புவித்தட்டில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிக நிலநடுக்கம் உருவாகின்ற ஜப்பான் பசிபிக் புவிதட்டின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment