கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வ� ��ி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர்.
ஷாருக் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவாக வரி கட்டி இருக்கிறார். அதே சமயத்தில் சல்மான் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதல் வரி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு 2 படங்களில் நடித்த ஷாருக் ஒவ்வொரு படத்துக்கும் ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கினார்.
2011-12ல் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.7 கோடி வரி செலுத்தி இருக்கிறார். எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் வரி குறைவாகவே கட்டி இருக்கிறார். அமிதாப் பச்சன் வருமானத்தின் பெரும் பகுதி கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி மூலமாகவே அவருக்கு கிடைத்தது. நடிகர் சைப் அலிகான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் இந்த ஆண்டு தலா ரூ.7 கோடி வரி செலுத்தி உள்ளனர்.
Post a Comment