ஆவின் நிறுவனத்தின் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற, மெஜந்தா நிற, ஆரஞ்சு நிற பாக்கெட் பால்களின் விலையும் உயரவுள்ளது. அதே போல நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்படவுள்ளது.
தமிழகத்தில் சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை (நீல நிற பாக்கெட்) லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து இந்த பாலின் விலை ரூ.17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்ந்தது.
மொத்தத்தில் ஆவின் நிறுவனம் 4 வகையான பாலை விற்பனை செய்து வருகிறது. 6 சதவீத கொழுப்புச் சத்து உள்ள பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்), 4.5 சதவீத கொழுப்புச் சத்து உள்ள நிலைப்படுத்திய (பச்சை நிற பாக்கெட்), 3 சதவீதம் கொழுப்புச் சத்து உள்ள சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்), 1.5 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து கொண்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிற பாக்கெட்) ஆகியவையே ஆவின் விற்பனை செய்யும் பால் பாக்கெட் வகைகள் ஆகும்.
இதில் 3 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்திய பாலின் (நீல நிற பாக்கெட்) விலையை மட்டுமே நேற்று அரசு உயர்த்தி அறிவித்தது. மற்ற பால் வகைகளின் விலை இன்று உயருகிறது.
இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
நெய், வெண்ணெய் விலையும்...:
அதே போல ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்க்ரீம், குலோப் ஜாமூன் போன்றவற்றின் விலையும் உயரவுள்ளது.
Post a Comment