திரிஷா தெலுங்கில் கங்கா, தம்மு என் இரு படங்களில் நடித்து வருகிறார். சமரன் என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறார்.
தம்மு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். கதாநாயகன். அவருக்கு ஜோடியாக முதலில் ஸ்ருதியை தேர்வு செய்தனர். ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் சிறந்த நடிகையாக சாதித்ததற்கு தனது தாய்தான் காரணம் என்றார் திரிஷா. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கு அம்மான்னா உயிர். எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களையும் திணிக்க மாட்டார். என்னை சுதந்திரமாக நடத்தினார். நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. சினிமாவுக்கு வரும் முன் மாடலிங் பண்ண ஆசைப்பட்டேன். அதை என் அம்மாவிடம் சொன்னேன். எந்த பெற்றோரும் படிப்பு கெட்டுப் போகும்னு வேண்டாம் என்றுதான் சொல்வார்கள்.
ஆனால் என் அம்மா அப்படி சொல்ல வில்லை. மாடலிங் செய்ய அனுமதித்தார். ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு "மிஸ் சென்னை" போட்டியில் ஜெயித்தேன். "மிஸ் இந்தியா" போட்டியில் சிரிப்புக்கு பரிசு கிடைத்தது. பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க வைத்தார்.
முதல் படமான "லேசா லேசா" படம் தோற்றதும் சினிமாவை வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் படம் தோற்றாலும் எனது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. நிறைய பட வாய்ப்புகளும் வந்தது. அதனால் சினிமாவை விட வில்லை. இந்த அளவுக்கு நான் உயர்வதற்கு என் அம்மாதான் காரணம்.
Post a Comment