அசினுக்கு தினமும் இந்தி நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். பாலிவுட் டாப் ஹீரோக்கள் ஆமிர்கான், சல்மான்கான் போன்றவர்களை கவர்ந்த அசின் இளம் நடிகர்களின் கனவு கன்னியாகவும் மாறி இருக்கிறார். இவருக்கு நடிகர் கமால் ஆர் கான் என்பவர் தினமும் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். இந்த முத்தத்தை தனது வெப்சைட் மூலமாகத் தருவதால் அவருக்கு பதிலடி தர முடியாமல் தவிக்கிறார் அசின். 'தேச துரோகி', 'சிட்டம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கமால் ஆர் கான். இவர் படங்கள் தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.
அசினின் அழகில் மயங்கிய அவர் தனது மைக்ரோ பிளாக்கிங் வெப்சைட்டில் காலை எழுந்தவுடன் அசின் புராணம் பாடத் தொடங்கிவிடுகிறார். 'நீங்க ரொம்ப செக்ஸியா, அழகா இருக்கீங்க. உங்களுக்கு எனது முத்தங்கள்' என குறிப்பிடுவதுடன் குட்மார்னிங்கில் தொடங்கி குட் நைட் சொல்வதுவரை இடைவிடாமல் தொல்லை தருகிறாராம்.
அசின் தனக்கென மைக்ரோ பிளாக் எதுவும் வைத்திருக்கவில்லை. எனவே இதுகுறித்து அவரது தோழிகள் அசினிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தார். கமால் ஆர் கான் தரும் தொல்லையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி புகார் தரும்படி தோழிகள் ஐடியா கொடுத்துள்ளனர். ஆனால், 'அவரையும் ஒரு ரசிகராகவே பார்க்கிறேன். புகாருக்கு அவசியமில்லை' என்று அசின் தனது தோழிகளிடம் சொன்னதாக தகவல்.
Post a Comment