தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார ஒழுங்குமுறை வாரியத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
இன்று ஒரே நாளில் பால் விலை, பேருந்துக் கட்டண விலை உயர்வுகளை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மின் கட்டணத்தையும் உயர்த்த பரிந்துரை செய்துள்ளார்.
கட்டண உயர்வு எவ்வளவு என்பது விரைவில் தெரியவரும்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மின் துறையை பொறுத்த வரை தமிழக அரசு வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட ரூ. 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும்.
இதனால் மின்சாரம் கட்டணத்தை விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கும், நெசவாளருக்கும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
home
Home
Post a Comment