'பில்லா 2' படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத்.
விஷ்ணுவர்தன் படத்திற்குப் பிறகு விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை 'சிறுத்தை' படத்தினை இயக்கிய சிவா இயக்க இருக்கிறார். முதல் படமான 'சிறுத்தை' வரவேற்பை பெற்றதை அடுத்து, அடுத்த படமே அஜீத் என்ற மாஸ் ஹீரோவை இயக்க இருப்பதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் சிவா.
அஜீத்தை இயக்க இருப்பது குறித்து சிவா " சிறுத்தை படத்தின் வரவேற்பை அடுத்து தமிழில் அஜீத்துடன் இணைந்து இருப்பதால் அப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அஜீத் சார் ஒரு முறை போன் செய்து விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தான் ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து பேசினார். நான் அவரை பார்க்க சென்றேன். கொஞ்சம் தயக்கத்துடன் தான் சென்றேன். அவர் என்னிடம் நட்போடு பேசினார். என் தயக்கங்கள் உடைந்தன.
அவரிடன் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன். ஜனவரி மாதம் அஜீத்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜீத்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி " என்று கூறியுள்ளார்.
சிவா இப்போது தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
Post a Comment