கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் குடும்பம் குடும்பமாக அதனை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என பிரதமர் மன்மோகன சிங் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்குழு இன்று அவசர ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி முன்று கட்ட போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் அறிவித்தார்.
முதல் கட்டமாக அணு உலைக்கு எதிராக நாளை கூடங்குளதிலிருந்து ராதாபுரம் வரை 10 கீ.மி பேரணி நடத்தப்படும்.
அடுத்து, அணுஉலை செயல்பாடுகள் தொடங்கினால் அங்கு குடும்பம் குடும்பமாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அனைவரும் அணு உலைக்கு முன்பாக திரண்டு போராடுவோம்.
இறுதிக்கட்டமாக, கூடங்குளம் அணு உலையிலிருந்து யுரேனியத்தை டிசம்பர் 31-க்குள் அகற்றாவிட்டால் ஜனவரி 1-முதல் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் இதற்காக கேட்க உள்ளோம், என்றார்.
Post a Comment