தீபாவளிக்கு வெளியான படம் 'ஏழாம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
சூர்யா ஏற்று நடித்த 'போதிதர்மன்' பாத்திரம் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியானது. தற்போது 'ஏழாம் அறிவு' படத்தை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்காக, படத்திற்கு சப்-டைட்டில் போடும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சர்வதேச திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படத்தில் தேவையற்ற காட்சிகளையும் பாடல்களையும் நீக்கி விட்டு அனுப்ப உள்ளார்களாம்.
Post a Comment