சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயமாகி போனதாக கூறப்பட்ட நிர்வாண நாயகி வீணா மாலிக், மும்பையிலிருந்து, பாகிஸ்தானுக்கு ரகசியமாய் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் எப்.எச்.எம்., என்ற பத்திரிக்கைக்கு முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் வீணா மாலிக். அதுமட்டுமல்ல தனது தோளில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., முத்திரையை பச்சைகுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தான் அப்படி ஒரு போஸ் கொடுக்கவே இல்லை என்றும், தனது படத்தை மார்ப்பிங் செய்து விட்டதாகவும் கூறி, சம்பந்தப்பட பத்திரிக்கைக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அது உண்மையான படம் தான் என்று எப்.எச்.எம்., கூறியது.
இந்நிலையில், ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக மும்பை வந்திருந்தார் வீணா மாலிக். இப்படத்தின் சூட்டிங்கில் தொடர்ந்து நடித்து வந்த வீணா, கடந்த 15ம் தேதி முதல் மாயமாகிவிட்டார். போனில் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து அவரது மேலாளர் பந்த்ரா, மும்பை காவல் நிலையத்தில் வீணாவைக் காணவில்லை என்று புகார் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, கடந்த சில தினங்களாகவே சூட்டிங்கில் சோர்வுடன் காணப்பட்டார் வீணா. கடந்த 15-ந்தேதி அன்று மிகவும் மனஉளைச்சலுடன், வேதனையிலும் இருந்தார். எனவே, அவரை "மேக் அப்" வேனில் ஓய்வு எடுக்கும்படி அனுப்பி வைத்தோம். அங்கு சென்றார். படப்பிடிப்புக்கு அவரை அழைத்து வர சென்ற உதவி டைரக்டர், அவர் அங்கு இல்லை என கூறினார். எனவே, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். அப்போது அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய அவர், தனக்கு காய்ச்சலாக இருப்பதாகவும், எனவே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது" என்றும் தகவல் அனுப்பி இருந்தார் என்றார்.
இதனிடையே மாயமாகி போன நடிகை வீணா மாலிக், ரகசியமாக பாகிஸ்தான் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீணாவின் விசா இன்னும் ஒரு சில தினங்களில் முடிய இருப்பதால், அதனை நீட்டிக்க அவர் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், அவரின் நண்பர் ஒருவர் அவரை பாகிஸ்தானில் கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment