முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுசீந்திரம் அருகே வனத்துறை ஊழியர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாதங்கள் கடந்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதல்வர் ஜெ., இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும். கூடங்குளத்தில் மின் உற்பத்தி காலதாமதம் ஆனால் பல விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே உடனடியாக மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பதவி ஏற்றதும் எடுத்திருந்த நிலைபாட்டை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு பிரச்னையால் இருமாநில மக்களுக்கிடையே இருந்து வரும் உறவு முறிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தின் உரிமையை இழக்கவும் முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்இழந்து நிற்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்னையில் முரண்டு பிடிக்கும் முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பதை பா.ஜ., ஆதரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment