News Update :
Home » » மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?

மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?

Penulis : karthik on Saturday, 31 December 2011 | 03:29

இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது?

கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.

சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும், சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?

இரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.

மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும். இரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் 'ஸ்கான்' செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.

மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு 'கல்லீரல் அழற்சி பி வைரசால்' பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.

இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger