டைரக்டர் மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பசுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்டவர் பசுபதி. ஆனால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போன பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
Post a Comment