இயக்குனருடன் ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை என்று நடிகை பூர்ணா கூறியுள்ளார். முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று நடிகர் விஜய்யால் புகழப்பட்ட பூர்ணாவுக்கு எந்த வெற்றிப்படமும் அமையவில்லை. தற்போது பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும், வித்தகன் படத்தில் பார்த்திபன் ஜோடியாக நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நிறைய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் முதன் முதலாக இயக்குனருடன் நடித்திருப்பது 'வித்தகன்' படத்தில்தான். பொதுவாக கமர்சியல் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை இருக்காது என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்கு இருக்கிறது. கிறிஸ்தவ பெண் கேரக்டர். பார்த்திபன் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே சாட்சி. ஆக்ஷன் காட்சிகளில் கூட நடித்திருக்கிறேன். வியட்நாம், செக் குடியரசு நாடுகளுக்கு சென்று பாடல் காட்சியில் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ஆடியது புதிய அனுபவமாக இருந்தது. பார்த்திபன் இல்லாத காட்சிகளில் எளிதாக நடித்து விட்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பது கோச்சுடன் சேர்ந்து விளையாடுவது மாதிரி இருந்தது. சிறிய தவறையும் உடனே கண்டுபிடித்து விடுவார். அதனால் பயந்து கொண்டே நடித்தேன். இயக்குனர்களே ஹீரோவாக நடிக்கும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பது கடினமானது என்பது புரிந்தது. மற்ற படங்களை விட இதில் நான் கூடுதல் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள், என்று கூறியிருக்கிறார்.
Post a Comment