நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயாராகின்றனர். பிப்ரவரி 14ந்தேதி திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது.
ரூ.45 கோடி செலவில் ப்யூச்சர் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கிரண் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்திலும் பாலகிருஷ்ணா ராமர் வேடத்திலும் நடித்துள்ளனர்.வால்மீகி வேடத்தில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் வருகிற 18-ந்தேதி ரிலீசாகிறது. தமிழிலும் வருகிறது. பிரபுதேவாவுடன் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க நயன்தாரா முடிவு செய்துள்ளார். சீதை வேடத்தில் நடித்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-
என் திரையுலக வாழ்க்கையில் ஸ்ரீராமராஜ்ஜியம் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதில் நான் சீதை வேடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சீதையாக நடித்ததின் மூலம் என் வாழ்க்கையே மாறியது. நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இப்படி அருமையான வேடத்தை எனக்கு கொடுத்த இயக்குனருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
18-ந்தேதி எனக்கு பிறந்த நாள் ஆகும். எனது பிறந்த நாள் பரிசாக இப்படம் திரைக்கு வருகிறது. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. அவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார். நயன்தாரா இனி சினிமாவில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார். இது பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பை ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் ரிலீசாகும் போது வெளியிடுகிறார்.
Post a Comment