பிப்ரவரி 4 ந் தேதி ரித்தேஷ் தேஷ்முக்கின் முழு கட்டுப்பாட்டுக்குள் வரப்போகிறார் ஜெனிலியா. ஆமாம்... அன்றுதான் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் புரோகிதர் வேலை பார்த்துவிட்டது மீடியா. அதை நானல்லவா முடிவு பண்ணணும்? மீடியாவுக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம் என்று தாண்டி குதித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் டாப் ஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார் ஜெனி. அவரது காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் அவ்வப்போது வதந்திகளை கிளப்பி குளிர் காய்ந்து கொண்டிருந்தது மீடியா. ஒரு சுவாசத்திற்கும் மறு சுவாசத்திற்கும் நடுவிலிருக்கிற இடைவெளி அளவுக்கு கூட விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்று ரகசியம் காத்த ஜெனிலியாவுக்கு பெருத்த ஏமாற்றம். இருவரும் எங்கே சந்திக்கிறார்கள் என்பது வரைக்கும் செய்திகளை பஞ்ச் பஞ்ச்சாக வெளியிட்டார்கள் நான்கு மொழி பத்திரிகையாளர்களும்.
இதில் எரிச்சலாகியிருந்த அவருக்கு நேற்றைய தினம் இன்னும் கொடுமை. பிப்ரவரி 4 ந் தேதி இருவருக்கும் திருமணம் என்ற செய்தியை நாடு முழுக்க பரவவிட்டது மீடியா. நேற்றே இதை மறுத்திருக்கிறார் ஜெனிலியா.
நாங்க ஒண்ணும் ரகசியமா கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஊர் உலகத்துக்கு அறிவிச்சுட்டுதான் செஞ்சுப்போம். அதற்குள் ஏன் நீங்களாகவே ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்றெல்லாம் அழுது புலம்பியிருக்கும் அவர், விரைவில் நாங்களே ஒரு தேதியை சொல்வோம். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டார்.
ஜெனிலியா இப்படி சொல்வதற்கு நிறைய காரணம் இருக்கிறது. இவரை நம்பி பணத்தை கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர்கள், இந்த திருமண செய்தியால் பெருத்த அப்செட். ஜெனிலியா நடித்த படங்கள் ரிலீஸ் ஆன பின்பு வேண்டுமானால் இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று கூறியிருப்பதாக தகவல்.
Post a Comment