ஆக்ஷ்ன் கிங்காக கோடம்பாக்கத்தில் வலம் வரும் நடிகருடன் ஜோடி சேர, அகர்வாலின் வாழ்க்கையில் புகுந்து பிரச்னையை உருவாக்கிய ஆண்ட்ரிய நடிகை மறுத்து விட்டாராம். சூதாட்ட படத்தில் அம்மணியும், ஆக்ஷ்ன் கிங்கும் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். ஜோடி பொருத்தம் சூப்பர் என நினைத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இருவரையும் ஜோடி சேர்க்க ஆசைப்பட்டார்.
கிங்கிடம் கேட்டதும் க்ரீன் சிக்னல் கிடைத்தது. ஆனால் அம்மணி பெரிய ரெட் கார்டே போட்டு விட்டாராம். `அவருடன் அந்த ஒரு படமே போதும் என்று கூறி அலுத்துக் கொள்ளும் அவர், இனிமே இப்படியொரு வாய்ப்புடன் யாரும் என் வீட்டுப்பக்கம் வந்துடாதீங்க என்றும் கூறி விட்டாராம். சூதாட்ட சூட்டிங்குல என்ன நடந்துச்சோ?
Post a Comment