தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 7 ஆம் அறிவு படத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மதுரையில் உள்ள தமிழ் ஜெயா தியேட்டரி்ல் பார்த்து மகிழ்ந்தார்.
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்தை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தனது மகன் தயாரித்த படத்தை பார்க்க ஆசைப்பட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை வந்த ஸ்டாலின் திமுக பிரமுகருக்கு சொந்தமான தமிழ் ஜெயா தியேட்டரில் 7 ஆம் அறிவு படத்தைப் பார்த்து ரசித்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு படம் பார்த்தார்.
படத்தை பார்த்துவிட்ட வெளியே வந்த ஸ்டாலின் கதை பற்றி முன்னாள் சபாநாயர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் விவாதித்தார்.
Post a Comment