தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லியிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாயகி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு நேர் மாறாக நோ சொல்லி விட்டாராம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "தெலுங்கு படவுலகில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை" என்று விளக்கம் கொடுத்தாலும் உண்மை அதுவல்லவாம். படத்தில் விமலாவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லையாம். மற்றொரு நாயகியான மாடல் அழகியின் கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறதாம். இதனை தெரிந்து கொண்டதால்தான் அம்மணி அஜித் படத்துக்கே நோ சொல்லும் நிலைமைக்கு போய் விட்டார் என்கிறது, விவரமறிந்த கோடம்பாக்கத்து வட்டாரம்!
Post a Comment