தனுஷ், ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மயக்கம் என்ன'. செல்வராகவன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
தீபாவளி தினத்தன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தற்போது 11/11/11 அன்று வெளிவர இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் தற்போது அனைத்து எஃப்.எம்களிலும் ஒலிபரப்பப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆகையால் எஃப்.எம் வர்ணனையாளர்களுக்கு செல்வராகவன் மற்றும் ஜெமினி ஆடியோ நிறுவனம் இணைந்து நேற்று (அக்டோபர் 28 )சென்னையில் விருந்து அளித்தனர்.
சென்னையில் உள்ள முக்கியமான எஃப்.எம் வர்ணனையாளர்கள் அனைவரும் இவ்விருந்தில் கலந்து கொண்டனர். செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து 'மயக்கம் என்ன' படப் பாடல்களைப் பாட, விருந்து நிகழ்ச்சி களைகட்டியது.
ரோபோ ஷங்கர் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்கள் 'மயக்கம் என்ன' பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் என ஆட, விருந்தினர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
அவ்விழாவில் பேசிய செல்வராகவன் " மயக்கம் என்ன படத்தினை 11/11/11 அன்று வெளியீட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். படத்தின் முதல் பிரதி தயாராகி விட்டது. அடுத்த வாரம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம் " என்று கூறினார்.
Post a Comment