பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை சேர்ந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். டி.எம்.எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவர், திரையுலக ஜாம்பவான்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், என பலருக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் டி.எம்.எஸ்.க்கு மீண்டும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Post a Comment