கேரளாவில் 5ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் அங்குள்ள கிறிஸ்தவ குருத்துவ மடத்தில் உள்ள இளநிலை குருத்துவ கல்லூரியில் ஆசிரியராக உள்ளார்.
இந்த நிலையில் வடக்கஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாம்சன் அந்த வழியாக சென்ற 5ம் வகுப்பு மாணவியை வழிமறித்தார். அதன்பின்பு அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் மாணவி சத்தம் போட்டாள். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சாம்சனை பிடித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சாம்சனை கைது செய்தனர்.
Post a Comment