தோல்விகள்தான் மனிதனை நிதானத்துக்கு கொண்டு வருகின்றன என்பது எத்தனை உண்மையாது, என்கிறார்கள் விஷாலின் இப்போதைய முடிவைக் கேட்ட சிலர்.
அவன் இவன் படத்தில் விஷாலுக்கு கிடைத்த நல்ல பெயரை மொத்தமாக துடைத்துவிட்டதாம் பிரபு தேவா இயக்கத்தில் உருவான வெடி. இந்தப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி,ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தும், படம் அதற்கேற்ப இல்லாததால் தோல்வியைத் தழுவிவிட்டது.
இதனால் தனது மார்க்கெட் நிலையை நன்கு உணர்ந்த விஷால், தனது அடுத்த படத்துக்கு சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக் கொண்டார் என கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.
இத்தனைக்கும் வெடி அவர்களது சொந்தத் தயாரிப்புதான். இந்தப் படத்தின் லாப நஷ்டம் விஷால் குடும்பத்தினருக்குதான். என்றாலும் நடைமுறை யதார்த்தத்தை புரிந்து நடந்து கொண்ட விஷாலைப் பாராட்டுகிறார்கள்.
இந்தப் பக்குவம் மற்றவர்களுக்கும் வராதா என ஏக்கத்தோடு கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அப்படின்னா… எல்லார் படமும் தோல்வியைத் தழுவ வேண்டி வருமே பரவால்லயா என எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் சில வாய்த் துடுக்கு நாயகர்கள்!
home
Home
Post a Comment