உள்ளாட்சித் தேர்தலையொட்டி அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரு தினங்களும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
த்மிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக இந்த இரு நாட்களும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கண்ட இரு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17-ந் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும், அரசு கல்வி நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் மூடியிருக்கும்.
இதேபோல், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 19-ந் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment