ஆச்சர்யம் ஆனால் உண்மை... என்பது போல, அவன் இவனுக்குப் பிறகு பாலா தொடங்கிய அடுத்த படமான பரதேசி படப்பிடிப்பும் சீக்கிரமே முடிந்துவிட்டது.
அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். பாலாவுக்கு இது ஆறாவது படம்.
மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் வேதிகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் எனப்படும� �� சீனிவாசன் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 80 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, சமீபத்தில் குற்றாலத்தில் நிறைவடைந்தது. பாலாவின் படம் என்றால் மாதக் கணக்கில்தான் கெடு சொல்வார்கள். அவன் இவன் படத்திலிருந்துதான் நாள் கணக்குக்கு அது மாறியுள்ளது.
முதல்முறையாக பாலா படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
Post a Comment