தனுஷ் ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் 'ஒஸ்தி' படத்த ிலும் நடித்தார். தற்போது 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' மற்றும் கார்த்தியுடன் 'பிரியாணி� �� ஆகிய படங்களில் நடிக்கிறார்.
டெல்லியில் பிறந்த இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீசார் வெளியிட்ட செய்தி நாட்டையே உலுக்கச் செய்தது.
நடிகை ரிச்சாவின் வீடு மும்பையில் அந்த வணிக வளாகத்தில் இருந்து சற்று தள்ளிதான் இருக்கிறது. வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியான ரிச்சா, நல்ல வேளை, கடவுள் அருளால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்று மிரட்சியுடன் கூறியுள்ளார்.
அடிக்கடி வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மும்பையை காலி செய்து விட்டு சென்னை அல்லது ஐதராபாத்தில் குடியேறலாமா என்று ரிச்சா யோசித்து வருகிறார்.
Post a Comment