News Update :
Home » » ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு

ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு

Penulis : karthik on Friday, 6 July 2012 | 10:30


மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்யாதவ் (ஏழை விவசாயி). இவரது மனைவிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் உடல் ஒட்டிய நிலையில் இருந்தன. ஆஸ்பத்திரியில் வைத்து � ��ுழந்தைகள் பராமரிக்கப்பட்டன.
 
ஒரு குழந்தைக்கு ஸ்டுட்டி என்றும் மற்றொரு குழந்தைக்கு ஆராதனா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்� ��து. கடந்த மாதம் 20-ந்தேதி இதற்கான ஆபரேஷன் நடந்தது. 22 டாக்டர்களை கொண்ட குழு ஆபரேஷன் செய்து, இரண்டு குழந்தைகளையும் தனியே பிரித்து எடுத்தது.
 
இதில் ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத� �து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரண்டு குழந்தைகளும் முதலாவது பிறந்த நாளை கொண்டாடின. மத்திய பிரதேச முதல் - மந்திரியே நேரில் வந்து குழந்தைகளை வாழ்த்தினார். ஸ்டுட்டி மட்டும் கேக் வெட்டினாள். அவளுக்கு கையை பிடித்து கேக் வெட்ட முதல்- மந்திரி உதவினார். அந்த சமயத்தில் ஆராதனாவின் உடல் நிலையில் லேசான முன்னேற� �றம் இருந்தது.
 
ஆனால் நேற்று திடீரென அவளின் உடல்நிலை மோசமடைந்தது. அவளை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால், முயற்சி வீணானது. மாலை 3 மணியளவில் இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் ஆராதனா மர ணம் அடைந்தாள். அந்த மரணம் ஆஸ்பத்திரியையே சோகத்தில் ஆழ்த்தியது. நர்சுகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger