News Update :
Home » » சிங்கள வீரர்களுக்கு பயிற்சி: விமானப்படை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு

சிங்கள வீரர்களுக்கு பயிற்சி: விமானப்படை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு

Penulis : karthik on Friday, 6 July 2012 | 02:10

தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிநவீன விமானபயிற்சி மற்றும் தொழில் நுட்பபயிற்சி அளிக்கப்படுகிறது. சார்க் அமைப்பில் � ��ள்ள நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு ஒப்பந்தப்படி இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது இலங்கையை சேர்ந்த 9 வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக கடந்த 30-ந்தேதி இங்கு வந்தனர். 

9 மாதங்கள் இவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக செ யல்படும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர ் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இலங்கை வீரர்களை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கோரிக்கை விடு� ��்துள்ளனர். இலங்கை ராணுவ வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதை கண்டித்து ம.தி.மு.க.வினர் அங்கு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். 

நாம் தமிழர் கட்சியினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சிகளும் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அங்கு பத� �்டமான சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையில் விடுதலைபுலிகளுடன் போர் நடந்தபோத ும், தாம்பரத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவையில் இலங்கை வீரர்கள் பயிற்சி பெற்ற போதும் எதிர்ப்பு காரணமாக வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர். இப்போதும் தாம்பரத்தில் இலங்கை வீரர்கள் பயிற்சி பெற எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் இவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என் று எதிர்பார்க்கப்படுகிறது.




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger