இந்தியா அணு ஆயுத நாடானது சரியானதே. இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் அனைத்தும் அணு ஆயுதத்தை வைத்திருந்தபோது, இந்தியாவும் அதை உருவாக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. இதன்மூலம் தான் தெற்காசிய மண்டலத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்க முடிந்தது என்று முன்னாள் ஜனாதிபதிபதி அப்துல் கலாம் கூறினார்.
இந்தியாவின் ஏவுகணை, ராக்கெட் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற விஞ்ஞானியான கலாம் 33-வது ஆசிய பசிபிக் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க வங்கதேசத் தலைநகர் டாக்கா வந்தார்.
அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இப்போது தெற்கு ஆசிய மண்டலத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் அணு ஆயுதம் மற்றும் தொலை தூர ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகித்தீர்கள். அதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?
கலாம்: இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்நிலையில், அதிகாரச் சமநிலையை எட்டுவதற்கு நாமும் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.
இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை முதலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தாது. பிற நாடுகள் தாக்கினால்தான் அதைப் பயன்படுத்தும்.
கேள்வி: ஏவுகணைத் திட்டங்களுக்கு நாம் ஏராளமான நிதியை செலவிட்டுள்ளோம். அதை வறுமை ஒழிப்புக்காக செலவிட்டிருக்கலாமே?
கலாம்: அக்னி, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களில் மிகவும் குறைந்த தொகையைத்தான் இந்தியா செலவிட்டது. அதனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய நி தியை ஆயுதம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்து தவறானது என்றார்
மேலும் அவர் கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளில் தெற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையும் என நம்புகிறேன். ஐரோப்பிய யூனியனைப் ப� �ன்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த விரோதங்களை மறந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்பட முடியும்போது, நம்மால் முடியாதா? என்றார்.
பின்னர் ஊரக மேம்பாட்டுக் கருத்தரங்கில் பேசிய கலாம், இந்தியாவும், வங்கதேசமும� � சணல் உற்பத்தியில் உலக அளவில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, இயற்கையாக விளையும் சணலைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த ஏராளமான வசதிகள் உள்ளன என்றார்.
Post a Comment