மலையாள பட உலகில் வாரிசு நடிகர்களான பிருதிவிராஜ், வினித் சீனிவாசன், துல்கர் மூவரும் கலக்குகின்றனர்.
பிருதிவிராஜ் பழைய நடிகர் சுகுமாரன் அவர்களின் மகன். துல்கர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன். வினித், பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மகன். இவர்கள் மூவருக்கும் த� �்போது மலையாளத்தில் படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இவர்களது படங்களுக்கு தந்தைமார்களின் ரசிகர்களும் கட்-அவுட்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். மூன்று வாரிசு நடிகர்களின் படங்களும் கேரளாவில் சமீபத்தில் ஒன்றாக ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
துல்கர் நடித்த 'உஸ்தட் ஓட்டல்' படம் கடந்த வாரம் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்� �ு வருகிறது. இதேபோல், வினித் நடித்த இரு படங்கள் ஏற்கனவே ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடித்துள்ள 'மலர்வதி ஆர்ட்ஸ்' படமும் வசூல் குவிக்கும் என நம்புகிறார்.
பிருதிவிராஜின் 'ஹீரோ' என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருந்தாலும் இவர் தற்போது நடித்து முடித்துள்ள 'பேச்சுலர் பார்ட்டி' படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்கிறார்கள்.
வினித் படங்களில் நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார். அவர் சமீபத்தில் இயக்கிய 'தட்டத்தின் மரயாது' என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Post a Comment