முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
புதிய அணைக்கு அனுமதி மறுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் தமிழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, அணை குறித்த ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு அணை வலுவாகவே இருக்கிறது, புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய அணை கட்டும் முடிவுக்கு உச்ச நீதிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத� � நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படும். மேலும் ஐவர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் சாதகமான அம்சங்களும் எடுத்துக் கூறப்படும் என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பினால் தமிழகம் மற்றும் கேரளா இடையேயான அணை பிரச்சினை மேலும் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment