News Update :
Home » » டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

Penulis : karthik on Friday 14 September 2012 | 00:23

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது
டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

சென்னை, செப். 14-

டீசல் விலையை மத்திய அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.43.91க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.48.91க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்த்தப்பட்ட டீசல் விலையில் தமிழக அரசு விற்பனை வரியாக ரூ.1.20 வசூலிக்கிறது. இவற்றுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.6.20 விலை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தவுடன் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. 2 கிலோமீட்டர் அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தால் ரூ.60 வரை செலுத்த வேண்டியது உள்ளது.

சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் டீசலில் ஓடக்கூடியவை. மீதமுள்ள ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடக்கூடியது. பெட்ரோல் விலை உயர்வு செய்யாத நிலையில் கூட பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களும் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களில் ஷேர் ஆட்டோ என்ற பெயரில் பெரிய அளவிலான ஆட்டோக்கள் அதிகளவு ஓடுகின்றன.

மாநகர பஸ்களின் வருவாயை தடுக்கக்கூடிய இந்த ஆட்டோக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புற்றீசல் போல் ஓடுகின்றன. இந்த வகை ஆட்டோக்களை சென்னை வாசிகள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பஸ்சுக்காக காத்து நிற்பதற்குள் அடுத்தடுத்து வரும் இந்தவகை ஆட்டோக்களில் ஏறி பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்களில் ஒருவர் பயணம் செய்ய குறைந்த பட்சம் ரூ.10 ஆக இருந்தது. டீசல் விலை உயர்வுக்கு பிறகு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக ரூ.10 முதல் ரூ.20 வரை ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட போக்குவரத்து செலவிற்காக கூடுதல் தொகை செலவிட நேரிடுகிறது. இந்த திடீர் கூடுதல் செலவு சாதாரண, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய பெண்கள், இளைஞர்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் செலவினமாகும் என்று மனம் குமுறுகிறார்கள். டீசல் விலை உயர்ந்தவுடன் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர். ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டண உயர்த்தபடும் என்று கே.பி.என் பஸ் நிர்வாக இயக்குனர் கே.பி.நடராஜன் தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது:-

ஏற்கனவே மோட்டார் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இத்தொழிலில் ஈடுபட்ட பலர் தொடர்ந்து செய்யமுடியாமல் வெளியேறி விட்டனர். மத்திய அரசு அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால் பஸ் கட்டணத்தையும் நாங்கள் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் விழுகிறது. மாநில அரசு வரி, டோல்கேட் கட்டணம் அதிகம் வசூலிப்பதால் இத்தொழிலில் லாபகரமாக நடத்த முடியவில்லை. தற்போது டீசல் விலையை உயர்த்தியதன் விளைவாக ஆம்னி பஸ்கள் கட்டணம் குறைந்தது ரூ.20 முதல் ரூ.30 வரை உயர வாய்ப்பு உள்ளது. 31 இருக்கைகள் கொண்ட ஆம்னி பஸ்களில் 20 இருக்கைகளை மட்டுமே கணக்கிட்டு கட்டணம் உயர்த்தினால் வண்டிகளை இயக்க முடியும்.

டீசல் விலை உயர்வால் எனது நிறுவனத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கூடுதலாக செலவாகிறது. ஆன்-லைன் மூலம் புக்கிங் வசதி எங்கள் நிறுவனத்தில் இருப்பதால் கட்டண உயர்வை கணக்கிட்டு அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஓரிரு நாட்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger