பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
மருத்துவரும், நடிகருமான 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதில் அவரே நடித்தும் வருகிறார். இவர் நடித்த 'லத்திகா' படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. இதன்பிறகு, சந்தானம் தயாரித்து நடிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் இன்னொரு நாயகனாகவும், சங்கர் இயக்கும் 'ஐ' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் �® �ிருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.
எனவே, சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மேலும் 2 வடமாநிலத்தவர்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Post a Comment